பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி தொழிற்கல்வி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி இறந்து விட்டார்.
மகன் கோகுலன் திருமணம் ஆகி வெளிநாட்டிலும்,மகள் மிருனாளினி திருமணமாகி சென்னையிலும் வசித்து வருகின்றனர். வெள்ளைச்சாமி மட்டும் தனியாக குருவிக்கரம்பையில் வசித்து வருகின்றார். தனிமையின் காரணமாக கடந்த சில வருடங்களாக சிறிது மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களாக வரும் தந்தையை காணவில்லை என உறவினர்கள் அவருடைய மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தந்தையை காணவில்லை என ஆன்லைனில் புகார் செய்துள்ளார்.இந்நிலையில் அவரது வீட்டிற்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது தென்னந்தோப்பிற்கு செல்லும் வழியில் மரக்கிளை இடுக்கில் இறந்த நிலையில் வெள்ளைச்சாமி கிடந்துள்ளார்.
இயற்கை உபாதைக்காக சென்ற போது இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.கடந்த சிலநாட்களாக தொடர் மழைபெய்த காரணத்தால் யாரும் செல்லாததால் இறந்து கிடந்தது தெரியவில்லை.பேராவூரணி காவல்துறை வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
Post a Comment