மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலக முற்றுகைக்கு கள்ளிவயல் தோட்ட முன்னாள் கூட்டறவு சங்க நிர்வாகிகள் ஆதரவு.!

 


இன்று(டிச.27) காலை 9:30 நடத்த இருக்கும் மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை முற்றுகை ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளிவயல் தோட்ட கூட்டறவு சங்க முன்னாள்  இயக்குனர் நூருல் அமீன் ஆதரவளிப்பதாக தகவல்.  

மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பிரச்சனை அளிக்கும் தஞ்சை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீனவர்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குள்ளாக்கும் அதிகாரிகளை கண்டித்தும், தமிழ்நாடு அரசின் மீனவர் நலவாரிய துணை தலைவர் தாஜூதீன் அவர்களை அவமரியாதை செய்த உதவி இயக்குனர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு கள்ளிவயல் தோட்ட சங்க முன்னாள் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post