அதிரையில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம்.!

  


அதிராம்பட்டினம் ஆனஸ்ட் லயன்ஸ் மற்றும் சார்பில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நாளை(டிச.28,2024) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

இம்முகாமை அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம்,யூனிவர்சல் இன்ஸ்பெக்கசேன், கோவை சங்கரா மருத்துவமண ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்

இம்முகாமில் சிறியவரகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.

அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு அறுவை சிகிச்சை,விழி லென்ஸ்,உணவு,தங்குமிடம், போக்குவரத்து செலவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

முகாம் வருபவர் ஆதார் கார்டு நகல் அல்லது வாக்காளர் அட்டை நகல் எடுத்து வரவும்.


Post a Comment

Previous Post Next Post