மல்லிப்பட்டினத்தில் மமக 17ஆம் ஆண்டு துவக்க தினம் கொண்டாட்டம்.!

 


மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி கொடியேற்றி எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மமகவின் 17ஆம் ஆண்டு துவக்க தினம் கொண்டாடபட்டு வருகிறது, அதன் ஒருபகுதியாக கட்சியின் துவக்க தினத்தில் மதுக்கூர்,அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மாநில துணைப்பொது செயலாளர் தஞ்சை பாதுஷா கட்சியின் கொடியேற்றி வைத்தார். வாகன பேரணியும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மமக மாவட்ட தலைவர் இத்ரீஸ் அகமது,மாவட்ட செயலாளர் அப்துல் பகத்,தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக்,மமக மாவட்ட துணை செயலாளர் இல்யாஸ் அகமது,தமுமுக துணை செயலாளர் புரோஸ்கான்,மனித உரிமைகள் சங்க மாநில தலைவர் டாக்டர்.அசன்முகைதீன்,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா,வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பஷீர் அகமது, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


மமக மாநில துணைப்பொதுச்செயலாளர் பாதுஷா அவர்களின் பேட்டி.!









Post a Comment

Previous Post Next Post