பட்டுக்கோட்டை தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மகளிர் அணி,மகளிர் தொண்டரனி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்,மாநில தணிக்கைகுழு உறுப்பினர் ஏனாதி பாலச்சுப்ரமணியன், தலைமைசெயற்குழு உறுப்பினர் பழஞ்சுர் செல்வம்,தொகுதி பார்வையாளர்கள் சரவணன்,குறிச்சி வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மகளிர் அணி மற்றும் தொண்டரனி சார்பில் திமுகவினருக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.அதிரை மேற்கு நகர செயலாளர் அஸ்லம் முதல் பரிசை வென்றார்.
சமத்துவ பொங்கல் விழாவில் அதிரை மேற்கு நகர செயலாளர் அஸ்லம் தலைமையில் பலர் கலந்ததுக்கொண்டனர்.மேலும் இந்நிகழ்வில் திமுக மாநில,மாவட்ட,நகர,ஒன்றிய,கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
தஞ்சை தெற்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரனி நிர்வாகிகள் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.
Post a Comment