எம்எல்ஏ முயற்சியில் நகராட்சியாக மாறுகிறதா பேராவூரணி...?

 



பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமார் வலியுறுத்தினார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது பேசிய அவர், பேராவூரணி பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்படுமா? பேராவூரணி நகரில் பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த அமைச்சர் கே.என். நேரு பேரூராட்சிக்கு போதிய வருமானமும், 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்தொகையும் இருந்தால் அதை நகராட்சியாகத் தரம் உயர்த்தலாம். இந்தாண்டு 25 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

எனவே, பேராவூரணியை நகராட்சியாகத் தரம் உயர்த்தப் பரிசீலிக்கப்படும்.

உறுப்பினர்கள் பலரின் கோரிக்கையின்படி சாலைப் பணிகளோடு கழிவுநீர் வாய்க்கால், மழைநீர் வடிகால் வாய்க்கால்களையும் சேர்த்தே இனி அமைக்கப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post