மல்லி நியூஸ் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!

 


பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களாலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டியாகும். விவசாயத்தை போற்றும் அறுவடை திருநாளாம் பொங்கல் தினம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் உற்சாகம் பொங்க கொண்டாடப்படுவது வழக்கம்.

தமிழகத்தில் பொங்கல் விழா வழக்கம் போலவே இந்த ஆண்டும் களை கட்டி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி செவ்வாய்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகளை அலங்கரித்து, தை மகளை வரவேற்க தமிழர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாள் தை மாதம் முதல் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். இது உத்திராயண காலத்தின் துவக்க காலமாகும். அதாவது தேவர்களின் நாள் பொழுது துவங்கும் நாளாகும். இது நம்முடைய வாழ்விலும் புதிய விடியலை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. அதனால் தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என சொல்லப்படுகிறது. இந்த தைத் திருநாள் நம் அனைவருடைய வாழ்விலும் புதிய மாற்றத்தையும், ஏற்றத்தையும், அனைத்து விதமான வளங்களையும் பொங்கி பெருக செய்ய வேண்டும் என அனைவருடனும் வாழ்த்துக்களையும்,மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம்.

உலக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை மல்லி நியூஸ் இணைய ஊடகம் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Post a Comment

Previous Post Next Post