மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்சியின் நிர்வாகிகளை திறன் வாய்ந்த அரசியலாளர்களாகவும், துடிப்புமிக்க நிர்வாகிகளாகவும் உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கில் மண்டல வாரியாக அரசியல் மற்றும் நிர்வாக பயிலரங்குகளை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக டெல்டா மாவட்ட நிர்வாகிகளுக்கான '25 மணி நேர பயிலரங்கு 'தஞ்சையில் உள்ள பண்ணை தோட்டத்தில் தொடங்கியிருக்கிறது.
மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வின் முதல் அமர்வுக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதின் தலைமை வகித்தார்.
தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் வல்லம் ரியாஸ் வரவேற்புரை ஆற்றினார்.
அதன் பிறகு பயிலரங்கின் நோக்கம் குறித்து தலைவர் தமிமுன் அன்சாரி விளக்க உரை ஆற்றினார்.
தொடர்ந்து அடிப்படை சட்டம் மற்றும் காவல் துறை அணுகுமுறைகள் குறித்து மனிதநேய வழக்கறிஞர் பேரவையின் மாநில செயலாளர் வழக்கறிஞர் அமீன், அதன் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் முஷ்ரப் வகுப்பெடுத்தனர்.
இதில் பலரும் ஆர்வத்துடன் தங்களது கேள்விகளை தொடுக்க, அவர்களுக்கு அவர்கள் விளக்கமளித்து தெளிவுப்படுத்தினர்.
தொடர்ந்து இரவு 11 மணி வரை வகுப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment