மல்லிப்பட்டினம் அம்பேத்கர் நகரில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் நான்காம் ஆண்டு தைத்திருநாளை முன்னிட்டு சிறுவர்கள் பங்கு கொள்ளக்கூடிய விளையாட்டு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவினை பேராவூரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் N. அசோக் குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் அரவிந்தன் குமார், பேராவூரணி நகர செயலாளர் மைதீன், சேதுபாவாசத்தை ஒன்றிய செயலாளர் முருகேசன், பசுபதி ஐ ஏ எஸ் அகாடமி நிறுவனர் பசுபதி போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் N. மனோஜ் M. தமிழ் மன்னன், சதீஷ்குமார், சின்னதம்பி, ராம்ஜி, கார்த்தி, ஹேராம், தரணீஸ்வரன், விஷால், முகிலன், நிவாஸ் போன்ற மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் 60க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது
மல்லிப்பட்டினம் அம்பேத்கர் நகரில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர்
Mallinews
0
Post a Comment