மல்லிப்பட்டினத்தில் மீனவரின் செயலை கண்டு பாராட்டிய மற்ற மீனவர்கள்.!

 


தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் கடலில் பிடித்த சினை குஞ்சுகள் இருந்த சம்பா நண்டை மீண்டும் கடலிலே விட்டனர்.

அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தை சேர்ந்த பாலமுருகன் நாட்டுபடகில் மீன்பிடிக்க சென்றிருந்தார்.அப்போது அவருடைய வலையில் சம்பா நண்டு சிக்கியது.அதனை கரைக்கு கொண்டு வந்து பார்த்தார்.

சம்பா நண்டில் சினை குஞ்சுகளை கண்டு கடல் வளத்தை அதிகரிக்கும் வண்ணம்  உடனடியாக அதனை மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுக கடலில் விட்டு சென்றார்.இதனை கண்ட மற்ற மீனவர்கள் மீனவரின் இச்செயலை வெகுவாக பாராட்டினர்.


https://youtu.be/eCWxMrNQy8Q?si=h4kXbtpjWVzW_uK4

1 Comments

  1. சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post