அதிரையில் களைகட்டிய தமிழர் பண்டிகை பொங்கல் விற்பனை.!

 



தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை போகிப்பண்டியுடன் தொடங்கி உள்ள நிலையில் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நாளை(ஜன.14) பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு , கடைகளில் காப்பு கட்டுவதற்கு பூஜைசெய்த ஆவாரம்பூ, பண்ணை பூ, வேப்பிலைகளைசொருகி வைத்து கொண்டாடுவார்கள், மேலும் மாட்டு பொங்கலை யொட்டி விவசாயத்திற்கு உறுதுணையாக விளங்கக்கூடிய மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாடுகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது.பொங்கல் வைப்பதற்கான பானை,அடுப்பு,கரும்பு,மஞ்சள் மற்றும்  தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

காலைமுதலே மக்கள் பொங்கல் மற்றும் பூஜை பொருட்களைவாங்க கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர், அதைத்தொடர்ந்து துணிக்கடைகளிலும் புத்தாடைகள் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதிய காணபடுகிறது. அதனால் அதிராம்பட்டினம் பகுதியே களை கட்டியது, மேலும் கடந்த ஆண்டை விட இந்தாண்டுவியாபாரம் மந்தமாக இருப்பதாகவே வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பாக பொருட்களை வாங்கி செல்வதற்கும் ஆங்காங்கே காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.











Post a Comment

Previous Post Next Post