தஞ்சை மாவட்டம்,சரபேந்திராஜன்பட்டிணம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்புகளில் வேட்டி சேலைகள் முறையாக வழங்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அரசு அறிவிப்பது மட்டும் எல்லாருக்கும் என்று ஆனால் பாதி பேருக்கு மேல் கிடைக்கவில்லை என்று புலம்புகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் சிலர் கூறுகையில், 'உதாரணத்திற்கு 1,300 ரேஷன் கார்டு உள்ள கடைகளுக்கு 600 கார்டுகளுக்கு மட்டுமே வேட்டி சேலை வந்துள்ளது. சில கடைகளில் 400 பேருக்கு மட்டும் கொடுத்துள்ளனர். சில கடைகளில் சிலருக்கு வேஷ்டியும் சிலருக்கு சேலையும் மட்டும் கொடுத்து சமாளித்து வருகிறோம்.
அரசு 100 சதவீதம் வழங்கினால் மட்டுமே அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வேட்டி சேலை வழங்க முடியும்,' என்றனர்.
Post a Comment