திருச்சி விமான நிலையத்தில் இஸ்லாமிய பயணிகள் தொழுவதற்கான தனி அறையை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திறந்து வைத்தார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா,துபாய்,அபுதாபி,மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் நாடுகளுக்கும் விமான போக்குவரத்து இருந்து வருகிறது. பயணம் செய்யக்கூடிய இஸ்லாமிய பயணிகள் தொழுகை நடத்துவதற்கு என தனி அறை வேண்டும் என்பது மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.இந்நிலையில் விமான நிலையத்தில் இஸ்லாமியர்கள் தொழுவதெற்கென தனி அறையை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்கு இஸ்லாமியர்களோடு இணைந்து தொழுகையில் ஈடுபட்டார்.இதனை இஸ்லாமிய பயணிகள் இதனை வரவேற்று பாராட்டினர்.
Post a Comment