தஞ்சை தெற்கு மாவட்டம், அதிரை நகர எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் வரும் பிப்-02 தஞ்சையில் நடைபெறவிருக்கும் வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு சம்பந்தமான கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்டத் துணைத் தலைவர் அகமது அஸ்லம் வரவேற்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர் நிஜாமுதீன் அவர்கள் தலைமை உரையாற்றினார். இக்கூட்டத்தில் மாநாடு தயாரிப்புகள் முடுக்கி விடப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் முஹம்மது புகாரி மற்றும் மாவட்ட பொருளாளர் முஹம்மது அஸ்கர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு அதிரை நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், மல்லிப்பட்டினம் கமிட்டி, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் சேது பாவா சத்திரம் கிளை நிர்வாகிகள் மற்றும் மரக்காவலசை கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி செயலாளர் தீன் முஹம்மது நன்றி கூறினார்.
Post a Comment