பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் மோதி அரசு பேருந்து ஓட்டுனர் பலி.!



 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பாலத்தில் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக பலியானார். 

பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் சீனிவாசன் (45), திருச்சி துறையூரை சேர்ந்த இவர் பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது மனைவி தேவிகா, மகள் அனிதா ஆகியோரை சென்னை செல்வதற்காக தமது மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டைக்கு அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றிவிட்டு பேராவூரணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்த போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் பாலத்தின் சுவரில் மோதியதில் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் ரவீந்திரன் வழக்குப் பதிவு செய்து உடலை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றார்.

Post a Comment

Previous Post Next Post