தமிழகத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழகத்தின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழக மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் தஞ்சை ரயில் நிலையம் அருகில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பழனிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மேயர் சன்.ராமநாதன்,அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.அதிரை மேற்கு நகர செயலாளர் அஸ்லம் தலைமையிலும் கலந்துக்கொண்டனர்.
Post a Comment