அதிரை 13 வது வார்டு சம்மந்தமாக ஆட்சியரை சந்தித்து எஸ்டிபிஐ கவுன்சிலர் மனு.!



 தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் நகராட்சி எஸ்டிபிஐ கவுன்சிலர் புதிய அங்கன்வாடி அமைத்து தர மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அதிராம்பட்டினம் நகராட்சி 13வது வார்டு கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் தஞ்சை மாவட்ட மாவட்ட ஆட்சியர் சந்தித்து வார்டுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து நீர் கசிவதாலும், சமைக்கும் இடமும்,குழந்தைகள் படிக்கும் இடமும் ஒரு சேர இருப்பதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாய இருப்பதால் அதனை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைத்து தர கோரிக்கை வைத்தார்.

இச்சந்திப்பில் 13வது வார்டு பொறுப்பாளரும்,எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் அஸ்லம் உடனிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post