தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம் அறம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் யஹ்யா சிறப்புரையாற்றினார்.காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர்,முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment