தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் (NFDP) மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் பதிவு செய்துகொள்ள வசதியாக ஏற்பாடுகளை மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளனர்.
பிரதமரின் மீன் விவசாயிகள் நல ஆதரவுத் திட்டத்தின் (PMMKSSY) கீழ் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணைய வழியாக பதிவேற்றம் செய்கின்றனர்.
கடன் வசதி, மீன்வளர்ப்பு காப்பீடு மற்றும் மானியங்கள் போன்ற ஏராளமான நன்மைகளைப் பெறுவதற்கு தகுதியான மீன்விவசாயிகளை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றை பிரதமரின் மீன் விவசாயிகள் நல ஆதரவுத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மீனவர்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளர்கள், பதப்படுத்துபவர்கள், போன்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய இந்த முகாம்களில் பங்கேற்று தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் தங்களைக் குறித்து பதிவு செய்து கொள்ளலாம்.
மீனவர்கள்,கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் அனைவரும் தங்களை இந்த முகாமில் கலந்துக்கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்:
1. ஆதார் அட்டை,
2. வங்கிப் புத்தக நகல்
3. ஆதார் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் உள்ள மொபைல் போன்
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வண்ணம் ஏற்பாடுகளை மீனவளம் மற்றும் மீன்வர் நலன் துறை ஏற்பாடு செய்துள்ளது.
1.யாகூப் கம்யூனிகேஷன்,மல்லிப்பட்டினம்
2.மீன்வளத்துறை அலுவலகம்,மல்லிப்பட்டினம்
3.முகைதீன் ஜூம்ஆ பள்ளி மதரஸா,மல்லிப்பட்டினம்
4.அந்தமான் சேவை மையம்,மல்லிப்பட்டினம் மற்ற அனைத்து சிஎஸ்சி சென்டர்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
Post a Comment