பட்டுக்கோட்டை தங்க தமிழன் துணியகம் சார்பில் ரமலானே வருக என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி,கிராஅத் போட்டி,வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வில் புதுப்பட்டினம் சேர்ந்த மாணவ,மாணவிகள் போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகள் வென்றனர்.குறிப்பாக கிராஅத் போட்டியில் முதல் பரிசை பஹ்சின்காமில் கோப்பையும், ₹5,000/- ரூபாய் ரொக்க பரிசுத் தொகையையும் பெற்றுள்ளார்.
பேச்சுப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த ஆதிஹா பதக்கத்தையும், ₹2,000 ரூபாய் ரொக்கப் பரிசுத் தொகையையும் வென்றார்.மேலும் போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிப் பெற்ற புதுப்பட்டினம் ஜமாஅத்தார்கள் நேரில் அழைத்து பாராட்டினர்.



Post a Comment