உடையநாடு ராஜராஜன் பள்ளியில் இஸ்லாமிய பண்பாட்டு விழா.!

 


தஞ்சை மாவட்டம்,வீரியங்கோட்டை உடையநாடு ராஜராஜன் கல்வி நிறுவனத்தில் இஸ்லாமிய பண்பாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இஸ்லாமிய பண்பாட்டு நிகழ்வில் இஸ்லாம் குறித்த பல்வேறு விதமான நிகழ்வுகள் பயான் நிகழ்ச்சிகள் வரலாற்று குறிப்புகள், இஸ்லாமிய நெறிமுறைகள் குறித்தும், வழிபாட்டு முறைகள் குறித்தும் எடுத்துரைக்கும் வண்ணம் பள்ளி மாணவ,மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து திறமைகளை வெளிக்காட்டினர்.போட்டிகளில் கலந்துகொண்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிழ்வில் பள்ளித் தாளாளர்,இமாம்கள்,இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்,பள்ளி குழந்தைகள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்




Post a Comment

Previous Post Next Post