தஞ்சை மாவட்டம் உடைய நாடு மேலத்தெரு முகைதீன் ஆண்டவர் ஜூம்ஆ பள்ளி மக்தப் மதரஸா ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.உடையநாடு பள்ளி நிர்வாகிகள், இமாம்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் சூரா மனனம்,ஹதீஸ் மனனம்,துஆ மனனம்,பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில் மக்தப் மதராஸா மாணவ,மாணவிகள் பங்கெடுத்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் பள்ளி மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment