திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி பேராவூரணியில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்.!

 


திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

மேலும், 01.04.2003 பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு,. உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு. உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப் பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண்.243 நாள்:21.12.2023ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டின் களைய வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




Post a Comment

Previous Post Next Post