தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வரும் நில உடைமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் தங்கள் பெயரில் உள்ள நில ஆவணங்கள், ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் உள்ளிட்ட ஆவணங்களை தங்களது பகுதிகளில் உள்ள இரண்டாம்புளிக்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறும் முகாமிற்கு நேரில் எடுத்து சென்று பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு ஆதார் அட்டை எண் போன்று விவசாய அடையாள எண் வழங்கப்படும்.
Post a Comment