கடந்த மூன்று மாதங்களாக 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் கால தாமதம் செய்யும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 100 நாள் வேலைத் திட்ட சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இன்று காலை 10 மணிக்கு காத்திருப்பு போராட்டம் துவங்கியது.
வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் சி. சுந்தரம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், வி.தொ.ச மாநிலக் குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளர் ஆர். வாசு, தென்னை விவசாயிகள் சங்கம் மா.செ ஆர்.எஸ். வேலுச்சாமி, சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார், வி.தொ.ச ஒன்றியத் தலைவர் வீ. கருப்பையா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், விவசாயத் தொழிலாளர் சங்கஇணைச் செயலாளர் ஆர். மகாலிங்கம்,துணைத் தலைவர் இளங்கோ,சிவனேசன், மணக்காடு கிளை பொறுப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், இந்திரா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீ மகேஷ் மற்றும் அலுவலர்கள் சமாதானப் பேச்சுவார்த்தைநடத்தினர். இதனால் காத்திருப்புபோராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது
Post a Comment