ஏழை எளிய பாமர மக்களின் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய தொகையை ஒன்றிய அரசு வழங்கவில்லை என மாநில அரசு குற்றம் சாட்டி கொண்டிருக்கும் நிலையில் 100 நாள் வேலை திட்டத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை எளியமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆகவே எந்த பாரபட்சம் இன்றி பார்க்காமல் இந்த 100 நாள் வேலை திட்டத்தின் ஊதிய தொகையை ஒன்றிய அரசும் மாநில அரசும் உடனடியாக ஊதியத்தை வழங்கி மீண்டும் 100 நாள் வேலை திட்ட பணியை தொடங்க அரசு முன்வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது இவ்வாறு மாவட்ட செயலாளர் பஷீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Post a Comment