மல்லிப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மல்லிப்பட்டினம்,புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் சுற்றி திரியும் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் சமீப காலமாக அதிக அளவில் வெறிநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் தெருவில் வருவோரை கடிப்பதும், விரட்டுவதும் வாடிக்கையாகி விட்டது.மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,மாடு, கோழி போன்றவற்றையும் கடித்து குதறிவிடுகின்றன.
தெருக்களில் கிடைக்கும் உணவுக்காக சண்டையிடும் தெருநாய்கள் சாலைகளில் செல்வோரை மிரள வைப்பதுடன் வேகமாக வந்து இரு சக்கர வாகனங்களில் மோதி அதில் வருவோரை கீழே தள்ளிவிடுவதும் தொடர் கதையாக நடக்கிறது.
ரேபிஸ் ஏற்படுத்தும் பாதிப்பு வெறி நாய் கடித்தவுடன் வைரஸ் கிருமி நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.
மேலும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சேதுபாவாசத்திரம்,மல்லிப்பட்டினம்,புதுப்பட்டிணம் பகுதிகளில் சுற்றி திரியும் தெருநாய்களின் தொல்லையை ஒழிக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் பகத் கோரிக்கை வைத்துள்ளார்.
Post a Comment