நெல்லை டவுண் காட்சி மண்டபம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாஹீர் உசேன் வெட்டிக்கொலை.முன்னாள் முதல்வர் கருணாநிதி தனிப்பிரிவு காவலராக இருந்துள்ளார்.
அதிகாலையில் தொழுகை முடிந்து, வீடு திரும்பியபோது ஜாஹீர் உசேனை மர்மநபர்கள் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பினர்.வக்ப் சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்க கூடும் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல்.இவர் வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் நிர்வாகியாகவும் இருக்கிறார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான 32 சென்ட் இடம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்திலும் இருந்து வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இடம் பிரச்சனை தொடர்பாக இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா என தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனிப்பிரிவு அதிகாரியாக ஜாகீர் உசேன் பிஜில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாஹீர் உசேனின் உடலை கைப்பற்றி நெல்லை டவுண் போலீசார் விசாரணை
பதற்றத்தை தணிக்க, நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் கீதா தலைமையில் போலீசார் குவிப்பு
Post a Comment