தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க மமக மல்லிப்பட்டினம் கிளை தலைவர் செய்யது புகாரி கோரிக்கை.
மாடுகள் வளர்ப்பவர்கள் பால்கறக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கால்நடைகளை சாலைகளில் விட்டு விடுகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவிலேயே மாடுகள் படுத்து ஓய்வெடுப்பதால் வாகனங்கள் செல்ல வழி இல்லாத சூழல் நிலவுகிறது.
சாலையில் நடந்து செல்வோர் மீது பல சமயங்களில் மாடுகள் முட்டி மோதுகின்றது. இதனால் பெண்கள், சிறுவர்கள், முதியோர் என பலதரப்பட்ட மக்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படும் சூழல் நிலவுகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்து ஓய்வெடுப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி விபத்துக்கள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளுக்கும், மாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் மீது மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் மோதி காயமடைந்து வரும் சம்பவமும் நடந்து வருகிறது. ஆகையால் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டும் இதற்கான நிரந்தரதீர்வு காணமுடியும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி மல்லிப்பட்டினம் கிளை தலைவர் செய்யது புகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment