தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் செய்யது அகமது கபீர் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், முனைவர் ஜெ. ஹாஜாகனி கலந்துக் கொண்டு நோக்க உரை ஆற்றினர். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் பேராவூரனி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் சிறப்புரையாற்றினர். தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் ரோசி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் போட்டியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
Post a Comment