பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும்,கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி கண்டித்தும் அதிரையில் எஸ்டிபிஐ கட்சியினர் பதாகை ஏந்தி பிரச்சாரம்.!



 SDPI கட்சி அதிரை நகரம் சார்பாக பதாகை ஏந்தி பிரச்சாரம் ஃபாலஸ்தீன் அப்பாவி பொதுமக்கள் மீது   இஸ்ரேல் நடத்துகின்ற தொடர் தாக்குதல்களை கண்டித்தும் தேசிய தலைவர் ஃபைஜி ஒன்றிய அரசின் பழி வாங்கும் நோக்கத்தோடு அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் பதாகை ஏந்திய பிரச்சாரம்  நகர தலைவர் அகமது இப்ராஹிம் தலைமையில் இப்ராஹிம் ஜும்மா பள்ளியில் ஈத் பெருநாள் தொழுகை முடிந்தவுடன்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகமது புகாரி,மாவட்டத் துணைத் தலைவர் அகமது அஸ்லம் கலந்து கொண்டனர்.

மேலும் SDPI கட்சியின் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் பொதுமக்கள் குழந்தைகள் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.





Post a Comment

Previous Post Next Post