பெருநாள் தினத்தில் பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்த மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ..!

 


எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டினம் ஜிபி கமிட்டி சார்பாக ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் தொழுகை முடிந்தவுடன் முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் மல்லிப்பட்டினம் ஜிபி கமிட்டி செயலாளர் ஹாமீம் பைசல் தலைமையில் ஃபாலஸ்தீன் அப்பாவி பொதுமக்கள் மீது இஸ்ரேலின் மனிதநேயமற்ற, பயங்கரமான தாக்குதல்களை கண்டித்தும், எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் M.K ஃபைஜி  ஒன்றிய அரசின் பழி வாங்கும் நோக்கத்தோடு அமலாக்க துறையால் பொய்யான குற்றச்சாட்டால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் பதாகை ஏந்தி கவன ஈர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

 சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்  நிஜாமுதீன்  சிறப்புரை வழங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் முஹம்மது அஸ்கர், எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் மீனவரணி மாநில செயலாளர் அப்துல் ரகுமான், அஇஅதிமுக IT விங் மாவட்ட இணை செயலாளர் அப்துல் ஹப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மல்லிப்பட்டினம் கிளை-1 பொருளாளர் சம்சுல் குதா  நோட்டிஸ் விநியோகம்செய்தார். மல்லிப்பட்டினம் ஜிபி கமிட்டி இணை செயலாளர் K. பாவா முஹைதீன் மற்றும் ஜிபி கமிட்டி செயலாளர் A. ஹாமீம் பைசல் ஆகியோர் கட்சி நிதி வசூல் செய்தனர். தேசியத் தலைவர் கைது பிளக் கார்டு மற்றும் இஸ்ரேலக் கண்டித்து உள்ள பிளக் கார்டுகளை இளம் சிறார்கள் ஏந்தி நின்றனர். இந்நிகழ்ச்சியில் மல்லிப்பட்டினம் ஜிபி கமிட்டி செயற்குழு உறுப்பினர்  அசாருதீன், ஜிபி கமிட்டி பொருளாளர் முஸ்ஸம்மில், மல்லிப்பட்டினம் கிளை-2 செயலாளர் AJ அப்துல்லாஹ், செயல்வீரர்கள், தொண்டர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு  செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.







Post a Comment

Previous Post Next Post