மல்லிப்பட்டினம் இளைஞர்கள் புதிய வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு.!



தஞ்சை மாவட்டம் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் புதுமனைத் தெருவை சேர்ந்த இளைஞர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள  இந்திரா சந்தித்து புதுமனைத்தெரு இளைஞர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

மேலும் மல்லிப்பட்டினம் புதுமனைத்தெருவில் தெருவிளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாடுவதாக்கவும், முஸ்லீம்களின் பண்டிகை காலமாக இருப்பதால் இரவு நேர தொழுகை முடித்து வரும்போது பெண்களும் அச்சப்படுகின்றனர்.

ஆகவே உடனடியாக இதனை சரிசெய்திட அப்பகுதி இளைஞர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர்.





Post a Comment

Previous Post Next Post