மல்லிப்பட்டினத்தில் கடல் ஆமை பிடிபடுவதை தடுக்கும் வண்ணம் வலைகளில் கருவி பொருத்தி பரிசோதனை நிகழ்ச்சி.!

 


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து விசைபடகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடி வலைகளில் ஆமை விலக்கு கருவி பொருத்தி பரிசோதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கடல் ஆமைகளின் உயிரிழப்பைத் தடுக்கும் கருவி, "ஆமை விலக்கு கருவி" (Turtle Excluder Device - TED) என்று அழைக்கப்படுகிறது. இழுவை படகுகளில் மீன்பிடி வலையில் பொருத்தப்படும்போது, ஆமைகள் வலையில் சிக்காமல் தப்பிச் செல்ல இது உதவுகிறது.

கடல் ஆமைகளின் உயிரிழப்பை தடுக்கும் வண்ணம் பல்வேறு முன்னேற்பாடுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்த பரிசோதனை நடைபெறுகிறது.

இந்த ஒத்திகைக்கு எம்பி டா நிறுவனத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் ரவீந்திரன் மீன் துறையிலிருந்து   ஆய்வாளர் வீரமணி என் போஸ்ட் டிபார்ட்மென்ட் ராஜா மற்றும் போர்ட் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சாகர் மித்ரா பணியாளர்கள் சென்றுள்ளார்கள்.





Post a Comment

Previous Post Next Post