தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற சனிக்கிழமை வரை தமிழ்நாட்டின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று(மார்.11) அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்தது.மல்லிப்பட்டினம் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று காலை பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. மல்லிப்பட்டினம் சுற்றி குளிர்வித்த திடீர் மழையால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Post a Comment