பேராவூரணியில் வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி மஜகவினர் ஆர்ப்பாட்டம்..!

 


பேராவூரணியில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

மஜக மாநில துணை செயலாளர் பேராவூரணி சலாம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் அதிரை சேக் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மஜக மாநில செயலாளர் நெய்வேலி இப்ராகீம்,சமூக செயற்பாட்டாளர் சத்ய பிரபு,பேராவூரணி ஜமாலியா மஸ்ஜித் செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

பேராவூரணி நகர பொறுப்புக்குழு உறுப்பினர் அசாருதீன் நன்றி உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.





Post a Comment

Previous Post Next Post