அதிமுக-பாஜக கூட்டணி இறுதி கட்ட முடிவு இன்று அறிவிப்பா?



மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.. இந்த பயணத்தில் அவர் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமித்ஷாவை இன்று சந்தித்து பேச உள்ளதாக தெரிகிறது. அநேகமாக அதிமுக - பாஜக கூட்டணி குறித்த தகவலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வந்துள்ள அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.. இதனால் நேற்றே இது சம்பந்தமாக தன்னுடைய இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.. அந்தவகையில் அமித்ஷாவுடனான சந்திப்புக்குபிறகு, அதிமுக, பாஜக கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, குருமூர்த்தியையும் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளார். அப்போது, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தலாம் என்கிறார்கள்

Post a Comment

Previous Post Next Post