தஞ்சை தெற்கு மாவட்ட விமன் இந்தியா மூவ் மெண்ட் அறிமுக கூட்டம் மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகரில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் அவர்கள் கூட்டத்தை துவக்கி உரையாற்றினார். இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொது குழு உறுப்பினர் மற்றும் விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சஃபிய்யா நிஜாம் அவர்கள் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை விளக்கம் அளித்து புதிய மாவட்ட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் அஹமது அஸ்லம், சேதுபாவாசத்திரம் ஒன்றிய துணைத்தலைவர் அன்வர், ஒன்றிய செயலாளர் முஹம்மது வஹி மன்சூர் மற்றும் மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்து செயற்குழு உறுப்பினர் அசாருதீன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இறுதியில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ரியாஸ் அஹமது நன்றியுரை நிகழ்த்தினார்.
Post a Comment