தஞ்சை தெற்கு மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் விசிக சார்பில் புதுப்பட்டினம் நகர செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் வெகு விமரிசையாக கொண்டாடினர்.
புதுப்பட்டினம்,விளாங்குளம்,செந்தலைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசிக கட்சியின் கொடியேற்றி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.மேலும் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் சிற்பி எனவும்,அனைத்து அடித்தட்டு மக்களின் வாழ்விற்காக அயராது பாடுபட்டவர் என்றும் பேசினர்.
மேலும் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கபட்டு 50க்கும் மேற்பட்டோர் விசிகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட சமூக நல உரிமை பிரிவு அமைப்பாளர் நடராசன்,தஞ்சை தெற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் கோட்டை
அரச மாணிக்கம்,மாநில பேச்சாளர் ஆத்மநாதன்,பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்கரவர்த்தி,சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் முருகேசன் ,சேதுபாவாசத்திரம் ஒன்றிய மகளிரணி பொருப்பாளர் நதியா மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்
Post a Comment