பிரதமரின் தமிழக வருகையை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்.!

 


தஞ்சை மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் இரயிலடியில் தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் பேசும் போது சிறுபான்மை மக்களை நசுக்கும் அனைத்து வேலைகளையும் பாஜக அரசு செய்து வருகிறது.மேலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளும் பாஜக செய்து வருவது கண்டிக்கத்தக்கது என பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் மல்லிப்பட்டினம் கமால் பாட்ஷா,சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாகூர் கனி மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள்  கலந்துக்கொண்டனர்.


Post a Comment

Previous Post Next Post