தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அருகே இரண்டாம்புளிக்காடு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.கட்சியின் மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலையில் கூட்டம் நடந்தது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் பலப்படுத்தவது,கட்சியின் தேர்தல் அங்கீகாரம் பெற்றதை ஒட்டி மல்லிப்பட்டிணத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆகியோரை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நா. இளந்தென்றல்,தஞ்சை -புதுக்கோட்டை மண்டலச் செயலாளர் சதா சிவகுமார், மாவட்ட பொருளாளர் தங்க முருகானந்தம் ,மாவட்டத் துணைச் செயலாளர் ரெ சி ஆதவன்,பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் சி நா சக்கரவர்த்தி, செய்தி தொடர்பாளர் வெற்றிச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் கோட்டை அரசன், மாணிக்கம், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆத்மா ஆனந்தகுமார்,ஈசிஆர் பகுதி ஒருங்கிணைப்பாளர் சேட் (எ) முகமது சுல்தான் மற்றும் ஒன்றிய நகர முகாம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment