பாபநாசம் அருகே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ரேஷன் கடை. சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி ஊராட்சி மில்லத் நகரில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ரேஷன் கடையை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சீனி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
விழாவில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, அய்யம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சங்கர், அங்காடி விற்பனையாளர் அறிவழகன், திமுக ஒன்றிய செயலாளர் நாசர், நகரச் செயலாளர்கள் துளசி அய்யா,கபிலன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் கலியமூர்த்தி, பள்ளிவாசல் தலைவர்கள் நூர்முகம்மது, அக்பர்பாஷா, பேரூராட்சி கவுன்சிலர்கள் பக்கீர் மைதீன், சாதிக் பாட்சா, வாலன்சுலைமான்பாட்சா, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தஞ்சைபாதுஷா, மாவட்டத் தலைவர் ரகமத்அலி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அசரப்அலி, மாநில செயற்குழு உறுப்பினர் பாரூக் மெகராஜ், பேரூர் செயலாளர் செல்லப்பா, சக்கராபள்ளி நிர்வாகிகள் பாபாஜி, முபாரக், மதரஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment