பாம்பன் எக்ஸ்பிரஸ் அதிராம்பட்டினம்,முத்துப்பேட்டை,பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்க வேண்டும் மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை.!

 


தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை டெல்டா மாவட்டங்களின் ரயில்கள் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவேண்டியது சம்பந்தமான கோரிக்கைகளை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் கருப்பு எம். முருகானந்தம் தலைமையில், பாரதிய ஜனதா கட்சி தேசிய கவுன்சில் உறுப்பினர் தங்க வரதராஜன் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் ,தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயற்குழு உறுப்பினர் ரேவந்த் குமார், திருச்சி கோட்ட ரயில் உபயோகிப்போர்  ஆலோசனைக் குழு உறுப்பினர் அதிராம்பட்டினம் அ.அப்துல் ரஜாக், பேராவூரணி ரயில் பயணிகள் நல சங்கத்தின்  ஆலோசகர் மெய்ஞானம் ஆகியோர் 22.04.2025 அன்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர் 

கோரிக்கை மனுவில் தஞ்சாவூர், விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர், காரைக்கால்  ரயில் பாதையை  இரட்டை  பாதையாக அமைக்க வேண்டும் 

பிரதமரால் அண்மையில் துவங்கி வைக்கப்பட்ட தாம்பரம் ராமேஸ்வரம் தாம்பரம்  பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்  பேரளம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம்,  பேராவூரணி ரயில் நிலையங்களில் ஒரு நிமிடம் செல்ல வேண்டும் வேண்டும் 

மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு சோழன் அதிவிரைவு இரயிலுக்கு இணைப்பு ரயிலை இயக்க வேண்டும் 

காரைக்குடியில் இருந்து காலை நேரத்தில் மயிலாடுதுறை க்கு பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் 

தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத், நமோ பாரத் ரயில்களை இயக்க வேண்டும்

 ஆண்டுக்கு 51.63 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வரும்,42.52 லட்சம் பயணிகள் பயணிக்கும் தஞ்சாவூர்ரயில் சந்திப்பில்  ரயில் பெட்டிகளை பராமரிப்பு செய்ய பிட் லைன் கட்டமைப்பு வசதிகளை அமைக்க வேண்டும்.

கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சர் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.

Post a Comment

Previous Post Next Post