மல்லிப்பட்டினம் ஹஜரத் கொஸ்ஸாலி ரஹ் தர்காவில் சந்தனக்கூடு விழா.!



 தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினத்தில் ஹஜரத் கொஸ்ஸாலி ரஹ் தர்காவின் சந்தனக்கூடு  விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மல்லிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஹஜரத் கொஸ்ஸாலி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நேற்று(ஏப்.22)  இரவு நடைபெற்றது. 

முன்னதாக ஆண்டாண்டுகளாக கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கமான மதநல்லிணக்கம் பேணும் வண்ணம் இராமர் கோவில் தெரு கிராமத்தார்கள் மண்டகப்படியும்,சேதுபாவாசத்திரம் கிராமத்தார்கள் மண்டகப்படியும் தர்காவிற்கு கொண்டு வந்தனர்.

மேலும் இந்த சந்தனக்கூடு நிகழ்வில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வை சிறப்பாக தர்கா கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post