தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம், பேருந்து நிலையம் அருகே காஷ்மீர் பகல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலை கண்டித்தும், உயிரழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிக் கூட்டம் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்தினர்.
மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் ஜவாஹீர் தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது.பகல்காம் தாக்குதலை கண்டித்தும்,இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் கட்சியின் மாவட்ட தலைவர் நிஜாமுதீன் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக் கலந்துக்கொண்டு பேசினார்.
இறுதியாக கட்சியின் கிராம பஞ்சாயத்து கமிட்டி இணை செயலாளர் ஹாமிம் பைசல் நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்துக்கொண்டனர்
Post a Comment