மல்லிப்பட்டினம் ராமர் கோவில் தெரு கிராமத்தார்களுக்கு கந்தூரி விழாவிற்கு அழைப்பு விடுத்த மல்லிப்பட்டினம் ஜமாஅத் மற்றும் கந்தூரி கமிட்டி.!



 தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஹஜரத் கொஸ்ஸாலி தங்கள் வலியுல்லாஹ் கந்தூரி விழாவினையொட்டி ராமர் கோவில் தெரு பஞ்சாயத்தார்களுக்கு அழைப்பு கொடுத்தனர்.

ஹஜரத் கொஸ்ஸாலி தங்கள் வலியுல்லாஹ்வின் கந்தூரி விழாவிற்கான ஏற்பாகளை கந்தூரி கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மல்லிப்பட்டினம் ராமர் கோவில் தெருவை சேர்ந்த பஞ்சாயத்தார்கள்,கிராம பொதுமக்கள் கந்தூரி விழாவில் கலந்துக் கொள்ள மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி நிர்வாகிகள் மற்றும் கந்தூரி விழா கமிட்டியினர் நேரடியாக சென்று அழைப்பிதழ் கொடுத்தனர்.






Post a Comment

Previous Post Next Post