பட்டுக்கோட்டை & பேராவூரணி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை செல்ல ஒரு ரயில் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றும்,தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தொடர் முயற்சியால் இன்று முதல் பட்டுக்கோட்டை மார்க்கமாக செல்லும் ரயிலை வரவேற்ற போது.
இந்நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு. பழனிவேல், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் சண்முகபிரியா மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், ரயில் உபயோகிப்பாளர் சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தனர் அதில் பொதுமக்களின் கோரிக்கையான பாம்பன் எக்ஸ்பிரஸ் மற்றும் பட்டுக்கோட்டை மார்கத்தில் செல்லும் அனைத்து பயணிகள் இரயில்களும் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி வழித்தடங்களில் உள்ள இரயில் நிலையங்களில் நின்று சென்றால் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் சென்னை செல்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
Post a Comment