மல்லிப்பட்டினத்தில் தமுமுக மமக கிளையின் ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் செய்யது புகாரி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக மமக மாவட்ட செயலாளர் அப்துல் பகத் மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்ததுக்கொண்டனர்.
கட்டத்தில் கோடைகாலமாக இருப்பதால் மல்லிப்பட்டினம் பகுதியில் கடந்தாண்டை போல தமுமுக-மமக சார்பில் தண்ணீர் பந்தல் அமைப்பது,வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து மே.13ல் மயிலாடுதுறையில் நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு மல்லிப்பட்டினம் கிளை சார்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்த வேண்டும் மேலும் அதில் அதிகமான மக்களை பங்கு பெற செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகி நைனா முஹம்மத்,ஏரிப்புறக்கரை கிளை தலைவர் நஸ்ருதீன் மற்றும் கிளை நிர்வாகிகள் முகமது குட்டி,பைசல் ரஹ்மான் கலந்து கொண்டார்கள்.
Post a Comment