வக்ஃப் நிலங்களை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வாரிய தலைவர் நவாஸ்கனி எம்பி அறிக்கை.
கடந்த மாதம் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் கீழ் இயங்கும் வக்ஃபு நிறுவனங்களின் அனைத்து முத்தவல்லிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான காலியாக, பயன்படுத்தாமல் உள்ள இடங்களில் சமுதாய மக்கள் பயன்பெறும் வண்ணம் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மதரசாக்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு வக்ஃபு வாரியம் அனைத்து அனுமதிகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வழங்க தயாராக உள்ளது என அறிவிப்பினை கடிதமாக எழுதியிருந்தேன்.
அந்த அறிவிப்பின் அடிப்படையில் வளர்ச்சி பணிகளின் துவக்கமாக வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம் தாஹிர் முகமது கான் மாஸ்க் வக்ஃபிற்க்கு பாத்தியப்பட்ட பயன்படுத்தப்படாமல் காலியாக இருந்த 3.11 ஏக்கர் நிலத்தில் பேர்ணாம்பட்டு நகர மற்றும் சுற்றுவட்டார கிராம புறத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு பேர்ணாம்பட்டு முஸ்லிம் எஜுகேஷன் சொசைட்டி நிர்வாகம் முன்வந்து கோரிக்கை விடுத்ததையடுத்து,
கடந்த வாரிய கூட்ட தொடரில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் அந்த பகுதி ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைவார்கள்,
நம்முடைய வக்ஃபு சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதற்கும் நம்முடைய முன்னோர்கள் எந்த நோக்கத்திற்காக இந்த சொத்துக்களை அர்ப்பணித்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் இது போன்ற வளர்ச்சி பணிகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.
அதற்கு இந்த நடவடிக்கை முன்னுதாரணமாகவும், சிறந்த துவக்கமாகவும் அமைந்துள்ளது.
இதே போல தமிழ்நாடு முழுவதும் காலியாக பயன்படுத்தப்படாமல் உள்ள வக்ஃபு நிலங்களை சமூக மக்கள் பயன்படும் வண்ணம் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு வக்ஃபு வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கொண்டிருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து அமானிதமான இந்த பொறுப்பில் அனைவரும் ஒருங்கிணைந்து சமுதாயம் பயன்படும் வண்ணம் சிறப்பாக பயணிக்க வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
--
கே நவாஸ்கனி MP
தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம்.w
Post a Comment