இறையருளால் அபு மெட்ரிக் பள்ளி தென்றல் தழுவும் கடலோர புதுப்பட்டினம் கிராமத்தில் 2003 ஜூன் 3- ம் தேதி துவங்கப்பட்டு 2005 ஜூன் 1 முதல், முறையாக அரசு அங்கீகாரம் பெற்று, நடைபெற்று வருகிறது.
2008 முதல் உயர்நிலைப் பள்ளியாகவும், 2016 முதல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு தகுந்த கட்டமைப்பு வசதியோடும், தகுதி வாய்ந்த திறன்மிகு ஆசிரியர்களோடும் நடைபெற்று வருகிறது.
நிறைவாக, நிறைகல்வி அறிவு பெற்ற, 6 ஆண்டுகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசு இணைவு (Aided) பெற்ற கல்லூரியில் 24 ஆண்டுகளாக பேராசிரியராகவும், 3 ஆண்டுகள் கல்லூரி முதல்வராகவும், சிறந்த முறையில் பணியாற்றி 36 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆற்றல்மிகு பேராசிரியர் அவர்களால் தனி ஆற்றலோடு இப்பள்ளி நிறுவப்பட்டும், அவர்களை தாளாளராக கொண்டும் செயல்படும் அபு பள்ளி 20 ஆண்டுகளாக சீரோடும், சிறப்போடும், புகழோடும் நடைபெற்று வருகிறது.
மாணவச் செல்வங்கள் பலர் மருத்துவராகவும், பொறியாளராகவும், அரசு பணியிலும், தனித்த தொழில் துறைகளிலும் பணியாற்றி வளத்தோடும், பெயரோடும் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாண்டு முதல் மாணவச் செல்வங்களுக்கு மேலும் எதிர்கால நல்ல வாய்ப்பினை அளிக்கும் விதமாக பதினோராம், பனிரெண்டாம் வகுப்புகளுக்கு NEET, IIT/JEE திறன் வளர் பயிற்சியை அளிப்பதற்கு திருச்சி, சென்னையில் 30 ஆண்டுகளாக பயிற்சி அளித்து புகழ்பெற்ற, ஸ்டெல்லா மேரிஸ் அகாடமி என்ற நிறுவனத்தோடு இணைந்து அபு அகாடமி என்ற இணைப் பயிற்சி நிறுவனத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் குரூப் 4 குரூப் 2 ஆகிய தேர்வுகளுக்கு, தேர்வர்களுக்கு குறுகிய காலத்தில் முழுமையான பயிற்சி அளித்து, அரசுப் பணிக்கு வழிகாட்டும் சீரிய முயற்சியையும் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இப்பகுதியில் வாழும் பெற்றோர்கள் இப்பள்ளி உயரிய குறிக்கோளான கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சி, பெண் கல்வி, நல்லொழுக்கம், நல்லறிவு, நல்ல ஆரோக்கியம் ஆகிய நோக்கங்களைக் கொண்டு செயல்படுவதை உணர்ந்து, தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்.
" கல்வியே மனிதனை உயர்த்தும்
கல்விச் சேவையே எங்கள் லட்சியம்"
Post a Comment